தாயின் உயிரை காப்பாற்ற. செயற்கை சுவாச இயந்திரம் ஒன்றை நலன்விரும்பிகளிடம் கோரும் மகள்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர்- 

சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள நோயினால் செயற்கை சுவாசத்தில் வாழும் தனது தாயிற்கு செயற்கை சுவாச இயந்திரமொன்றை வழங்குமாறு நலன்விரும்பிகளிடம் அத்தாயின் மகள் வேண்டுகோள் விடுக்கிறார்

அட்டன் டிக்கோயா தோட்டத்தை சேர்ந்த ரூபாசாமி ஸ்ரீயானி என்பவரே தனது தாயின் உயிருக்காக இவ் உதவியை நாடியுள்ளார்.

கடந்த நான்கு மாத காலமாக சுவாசப்பையின் ஏற்பட்டுள்ள நோயினால் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வரும் நான்கு பிள்ளைகளின் தாயாரான 62 வயதுடைய மொரின் ராஜேந்திரி வைத்தியசாலையின் செயற்கை சுவாச இயந்திரத்தினூடாக சுவாசிக்கை வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந் நிலையில் தொடர்ந்து நான்கு மாதங்களாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் தான் இருப்பதாக மகள் ஸ்ரீயானி தெரிவித்தார்.

இது தொடர்பில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் நிபுனர் கித்சிரி கருனாதிலக்கவிடம் கேட்டபோது குறித்த நோயாளர் சுவாசப்பையின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் செயற்கை சுவாச இயந்திரத்தினால் நான்கு மாதகாலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் வைத்தியசாலையில் இரண்டு சுவாச இயந்திங்கள் மாத்திரமே இருக்கின்றது இந்த தாயிற்கு யாரும் தனவந்தர்கள் செயற்கை சுவாச இயந்திரமொன்றை பெற்றுக்கொடுக்க முன் வந்தால் அத் தாய் தனது வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் வாழ உதவும் எனவும் சந்தையில் செயற்கை சுவாச இயந்திரம் விற்பனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் எனது தாயை எனது வீட்டுக்கு அழைத்து செல்ல தனவந்தர்கள் உதவிடுமாறு மகள் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -