எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பு நகர சபை மண்டத்தில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளன.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை பாலஸ்தீனிய ஒற்றுமை இயக்கம் மற்றும் இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பல அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
