குஜராத் தேர்தலில் மோடி அவுட் ஆவார்....!

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.

இந்த கருத்து கணிப்பின்படி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் சமவாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குஜராத்தில் பாஜக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் 43 வாக்குகளை பெற்று சமநிலையில் உள்ளது. இதன் மூலம், பாஜகவின் வாக்கு சதவிதம் 16 குறைந்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 14 உயர்ந்துள்ளது. பட்டேல் சமூகத்தினரும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -