பாடசாலை தவணைகளின் அட்டவணை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது


தலவாக்கலை பி.கேதீஸ்-

2018 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை தவணைகளின் அட்டவணை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இத்தவணைகள் அரச பாடசாலைகள்,அரச உதவி பெறும் பாடசாலைகள்,கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் கல்வி நிறுவனங்களான ஆசிரியர் கலாசாலைகள்,தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான பாடசாலை தவணைகள் பின்வருமாறு முதலாம் தவணை 2018 ஜனவரி 2 முதல் 2018 ஏப்ரல் 6 ம் திகதி வரை.இரண்டாம் தவணை 2018 ஏப்ரல் 23 முதல் 2018 ஆகஸ்ட் 3 ம் திகதி வரை.மூன்றாம் தவணை 2018 செப்டெம்பர் 5 முதல் 2018 டிசம்பர் 7ம் திகதி வரை.
முஸ்லிம் பாடசாலைத் தவணைகள் பின்வருமாறு

முதலாம் தவணை 2018 ஜனவரி 2 முதல் ஏப்ரல் 11ம் திகதி வரை. இரண்டாம் தவணை முதலாம் கட்டம் 2018 ஏப்ரல் 18 முதல் மே மாதம் 11 ம் திகதி வரை.இரண்டாம் கட்டம் 2018 ஜீன் 18 முதல் ஆகஸ்ட் 17 வரை.மூன்றாம் தவணை 2018 ஆகஸ்ட் 27 முதல் டிசம்பர் 7ம் திகதி வரை.அரசாங்க விடுமுறைகள்,நோன்மதி விடுமுறைகள் மற்றும் சமய விடுமுறைகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு 197 நாட்கள் மாத்திரம் பாடசாலை நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -