
ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையின்கீழ் இயங்கிவரும் மீராவோடை தாருல் ஹுதா மற்றும் பதுரிய நகர் அஸ் – ஸபா ஆகிய பாலர் பாடசாலைகளின் மாணவர் வெளியேற்று விழா அண்மையில் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூட்டத்தில் பதுரிய நகர் சனசமூக நிலைய தலைவரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஊடக இணைப்பாளருமான எம்.எஸ்.எம். இப்ராகிம் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மாணவர்களின் அற்புதமான கலை நிகழ்ச்சிகளோடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்கள் உலமாக்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். வெளியேறும் மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.