யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதையே அறியாதஜனாதிபதி, எப்படி இலங்கை முஸ்லிம்களின்பிரச்சினைகளை தீர்த்து தரப்போகிறார்





யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதையே அறியாதஜனாதிபதி, எப்படி இலங்கை முஸ்லிம்களின்பிரச்சினைகளை தீர்த்து தரப்போகிறார் என பானதுறைபிரதேச சபையின் தலைவர் இபாஸ் நபுஹான்வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கேள்விஎழுப்பியுள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும்குறிப்பிட்டுள்ளதாவது..

யாழ்பாணத்தில் தேசிய மீலாதுன் நபி விழா நிகழ்வுஇடம்பெற்றிருந்தது. வழமையாக ஜனாதிபதி, பிரதமர்போன்ற முக்கிய புள்ளிகள் கலந்துகொள்வது வழமை.இம்முறை இந் நிகழ்வுக்கு ஜனாதியை அழைக்க பெரும்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்த போதிலும்,அந்த முயற்சிகள் யாருக்குமே வெற்றியளிக்கவில்லை.இலங்கை முஸ்லிம்களை பல விடயங்களில் புறக்கணித்துவரும் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனஇவ்விடயத்திலும் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளார்.கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் இதுவரை வாய்திறக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதுபொருத்தமானது.

இவர் இந் நிகழ்வை புறக்கணித்தது தொடர்பில் பலவிடயங்கள் நம்பத்தகுந்த ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன.அதில் பிரதானமானது, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள்அதிகம் உள்ளார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாதாம்.முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் ஒரு நிகழ்வை நடத்தும்போது அங்கு மக்களை எதிர்பார்க்க முடியாதல்லவா? இதுசாதாரணமான ஒன்றல்ல. அன்று விடுதலைப் புலிகள்இலட்சக் கணக்கான முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தனர்என்பது வரலாறு. இது சாதாரணமாகவே அனைவருக்கும்தெரியும். இதுவே தெரியாமல் இருப்பதானது எமதுவரலாற்றை நையாண்டிக்குட்படுத்துவது போன்றாகும்.இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் இலட்சக் கணக்கானமுஸ்லிம்கள் உள்ளார்கள் என்பது தெரியாதவர், ஒருஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர்.

இப்படியான ஒருவரை பெரும்பான்மையான முஸ்லிம்கள்ஆதரித்து ஜனாதிபதியாக்கியமைக்கு வெட்கப்படவேண்டும். இதனைப் போன்ற தவறு வேறு ஏதுமில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ மீது வெறுப்புற்று படு குழியில்வீழ்ந்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -