என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படப் போகிறார்களோ தரியாது -ஜனாதிபதி

வத் கீதையில் கூறப்படுவது போல என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

என்னுடைய வாளுக்கு வெட்டுப்படுவது எனது குடும்ப உறவினர்களா? நண்பர்களா? எனக்கு நெருக்கமானவர்களா? யார் என்பது எனக்குத் தெரியாது. யாரானாலும் வெட்டுப்பட்டுச் செல்வார்கள் என பகவத் கீதையில் கூறப்படுகின்றது.

அதேபோன்றுதான், தூய்மையான அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு கொடுப்பதற்கு என்னுடைய வாளுக்கும் யார் வெட்டுப்படுவார்கள் என்பதை என்னால் கூற முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -