இந்த விமானம், தனது முதல் ஒரு மணி நேர பயணத்தை செய்துள்ளது.
கிட்டத்தட்ட போயிங் 747 வகை விமானத்தைபோலவே அளவுள்ள இந்த விமானம், நான்கு டர்போபாப் எஞ்சின்களை கொண்டது.
இது, குவாண்டூங் பகுதியிலுள்ள ஸஹாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில், 50 பயணிகளுடன் தொடர்ந்து 12 மணிநேரம் பறக்க முடியும்.
இதில், தீயணைப்பு படைக்கான உபகரணங்கள், கடற்படை காப்பாற்றுதல் பணிகளுக்கான உபகரணங்கள் உள்ளன.
அதேபோல, இது ராணுவப்பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், பிரச்சனைக்குறிய தென்சீன கடல்பகுதிகளில் இதை பயன்படுத்த முடியும் குன்லாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தால், சீனாவின் எல்லை என்று அந்நாட்டால் கூறிக்கொள்ளப்படும், தென்கோடிக்கும் செல்ல முடியும்.
அந்நாட்டு ஊடகமான, ஷின்{ஹவா, இந்த விமானத்தை, ஹகடல், தீவுகள் மற்றும் கடற்பரப்புகளை பாதுகாக்கும் சக்திஹ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விமானம் கிளம்பும் காட்சி, அந்நாட்டு ஊடகத்தில் நேரலையாக காண்பிக்கப்பட்டதோடு, அது தரையிறங்கும்போது மக்கள் கொடி அசைத்து, ராணுவ இசையை இசைத்து வரவேற்றனர்.
இந்த விமானம் எட்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. இது கிளம்பும் எடை, 53.5 டன்கள், இதன் இரக்கைகள், 38.8 மீட்டர் அளவு உள்ளன.
இதேபோன்ற 17 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
