கொழும்பில் அமைந்திருந்த இராணுவத் தலைமையகம் கடந்த ஆட்சிக்காலத்தில் எதற்காக அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டது என்பது தொடர்பிலும்,
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி குறித்தும் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஜனாதிபதியால் இதற்கு சம்மதம் வெளியிடப்பட்டது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்படி தகவலையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -