காரைதீவு நிருபர் சகா-
கல்முனை தொகுதி தமிழரசு கட்சி தலைவர் மு. இராஜேஸ்வரன் ( முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ) செயலாளர் சி. ஜெயக்குமார் ( முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ) ஆகியோரும்
அவர்களோடு நிர்வாக சபை உறுப்பினர்களான புவிராஜா மற்றும் நிதான்சன் ஆகியோரும் இராஜினாமா செய்துள்ளனர்.
கல்முனை மக்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட முடியாது என்றும் கல்முனை தமிழ் மக்களுக்காக இப்பதவிகளை துறப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் தமிழரசு கட்சியை வளர்க்கவும் வரும் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பான வேட்பாளர் தெரிவுவில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக வேட்பாளர்களை தெரிவு செய்ய முடியாது என்ற காரணத்தினாலேய இவர்கள் கட்சியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
.இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைக் தொகுதிக் கிளைத் தலைவராகிய மு.இராஜேஸ்வரன் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) செயலாளர் சி.ஜெயக்குமார் (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) ஆகிய நாங்கள் கல்முனைஇ மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இடம்பெற்ற ஆசனப் பங்கீட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக கிளைக்குழுக் கூட்டம் 2017.12.11 ஆந் திகதி தீர்மானத்தில் எடுக்கப்பட்ட விடயங்களில் இதுவரை சாதகமான முடிவுகள் எட்டப்படாமலும் சில விட்டுக் கொடுப்புடன் கட்சியினதும் கல்முனை தமிழர்களினதும் நலன் கருதியும் தியாக சிந்தனையுடனும் செயற்பட எத்தனித்து முயற்சிகள் எடுக்கும் போது வட்டார ரீதியில் செல்வாக்குள்ள நபர்களை வெளிப்படையாக தெரிவு செய்து அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாற்றுக் கட்சியைச் சார்ந்த தனிப்பட்டவர்களின் நடவடிக்கை பாதகமாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்து வருகின்றது.
எனவே கல்முனை வாழ் தமிழ் மக்களில் அக்கறையற்று செயற்படும் தனி நபர்களின் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
எனவே மக்களின் நலனிலும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் சிறந்த சேவை செய்யும் சிந்தனையுள்ளவர்களை அந்த அந்த வட்டாரங்களில் தெரிவு செய்ய முடியாமல் இந்த தொகுதிக் கிளையில் தலைவர் செயலாளராக தொடர்ந்து செயற்படுவது எங்களது மனசாட்சிக்கும் கல்முனை தமிழர்களுக்கும் இழைக்கும் துரோகமாக அமையலாம் என கருதுவதுடன் தூய்மையான அரசியலையும் மக்கள் நலனில் அக்கறையுடனும் எமது பதவிகளை மக்களுக்கான இராஜனாமாச் செய்கின்றோம்.
எங்களது கட்சி சார்ந்த கொள்கையிலும் சிந்தனையிலும்செ யற்பாட்டிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.



