எம்மை விட்டேகிய சம்மாந்துறை பதியின் கலை-இலக்கியவாதிகளை நினைவுகூர் நிகழ்வு.




பி.எம்.எம்.ஏ.காதர்-

ஸ்ரீலங்கா பாவலர் பஸீல் காரியப்பர் ரசிகர் வட்டத்தின் ஏற்பாட்டில் எம்மை விட்டேகிய சம்மாந்துறை பதியின் கலை-இலக்கியவாதிகளை நினைவுகூர் நிகழ்வு நாளை சனிக்கிழமை (30-12-2017)காலை 9.00மணிக்கு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.ஸ்ரீலங்கா மனித நேய நற்பணி பேரவையின் பிரதம நிறைவேற்றும் பணிப்பாளர் இர்ஷாட் ஏ.காதர் முன்னிலையில், ஸ்ரீலங்கா பாவலர் பஸீல் காரியப்பர் ரசிகர் வட்டத்தின் ஸ்தாபகத் தலைவர் வரலாற்று ஆய்வாளர் தேசமான்யா ஜலீல் ஜீ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் முதன்மை அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம்,சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை மஜ்லிஸ் சூறா சபைத் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.எம்.அமீர்,நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா,பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா,வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் நஜீம்,வைத்திய அத்தியட்சகர் வை.பி.எம்.அப்துல் அஸீஸ்,சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே,இப்னு அஸார்,பிரதேச சபைச் செயலாளர் எம்.ஏ.கே.முகம்மட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் மர்ஹும்களான ஓய்வு பெற்ற அதிபர்கள் யூ.எம்.முஸ்தபா,ஏ.அமீர்,எஸ்.எச்.எம்.முஸ்தபா ஆகியோர் பற்றிய “நினைவுச் சுவடு”நூலும் வெளியிடப்படவுள்ளது. அறிவிப்பாளர்களான யூனுஸ் கே.றகுமான், ஏ.ஸி.நௌசாட்,எஸ்.எம்.எம்.ஜவாத் ஆகியோர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கவுள்ளனர். 
 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -