புதிய குடியிருப்புகளை அமைத்து எம்மை தங்க வைக்க வேண்டும் - நோர்வூடில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பு




க.கிஷாந்தன்-

நோர்வூட் பகுதியில் 30.11.2017 அன்று பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்டு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 81 குடும்பங்களை சேர்ந்த 360 பேர் பாதுகாப்பு கருதி தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்காளக பெய்த மழை காரணமாக தமது இருப்பிடங்களில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் தஞ்சமிடம் கோரி நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பகுதியில் ஆற்றோர பிரதேச குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தவர்களுள் ஆண்கள் 171, பெண்கள் 189 என பலரும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்னர். இவர்களுக்கான உலர் உணவு வசதிகளை அம்பகமுவ இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக கிராம சேவகரின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படாத வகையில் புதிய குடியிருப்புகளை அமைத்து எம்மை தங்க வைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வழியுறுத்துவதாக இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நிலையில் பாதிப்புக்குள்ளாகி தங்க வைக்கப்பட்டோரில் சிலர் தங்களது சொந்த குடியிருப்புகளுக்கு மீண்டும் சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -