நீதி கிடைக்குமா அதிபரால் தாக்கப்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மாணவனுக்கு..!

16/11/2017 அன்று மூதூர் மத்திய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் A. அயாஸ் பாடசாலை அதிபர் A.H.M பஸீர் ஆல் தாக்கப்பட்டுள்ளார் இந்த மாணவர் தனது சிறுவயதிலேயே தந்தை இழந்தவர். அவரின் தாய் மிகவும் வறுமை கோட்டின் கீழ் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அவரை கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றார். பாதிக்கப்பட்ட இம் மாணவன் 3 நாட்களாக மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதோடு அவரின் பெற்றோர் மூதூர் பொலிசிலும் இதனை பற்றி முறைப்பாடு செய்து இருந்தனர். இதனை விசாரித்த போலிஸார் இவ்விவகாரத்தை மூதூர் மத்தியஸ்த சபைக்கு விசாரணைக்காக கைமாற்றியுள்ளனர்.

பொதுவாக சிறு பராய மாணவர்கள் தவறு விடக் கூடியவர்கள் அதனை திருத்துவதற்கு பல முறைகள் உள்ளது தவறின் தன்மைகேற்ப அந்தந்த முறையில் தான் திருத்த வேண்டும் மாறாக காட்டு மிராண்டித்தணமாக அம்மாணவர்களை தாக்குவது மிகப் பாரதூரமான குற்றமாகும் எனவே பாதிக்கப்பட்ட இம்மாணவனுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். ஏனெனில் இவ் அதிபரின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்களால் பல மாணவர்கள் இதற்கு முன்னரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த செய்தி தொடர்பில் சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபரை எமது செய்திப் பிரிவு பல தடவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -