கனடா வென்கூவரில் இயங்கிவரும் முஸ்லீம் அமைப்பான SRILANKA MUSLIM SOCIATY OF CANADA (SLMS CANADA )வினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 25ம் திகதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது,
கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களது இவ் ஒன்றுகூடலானது வென்கூவர் புறநகரான பெர்னாபி றோயல் பெங்குவேட் மண்டபத்தில் இடம்பெற்றது, இந்த இஃப்த்தார் நிகழ்வுக்கு ரிச்மண்ட், சர்ரே, பெர்னபி மற்றும் வடக்கு வென்கூவரிலிருந்தும் சுமார் 180 பேர்கள் கலந்து கொண்டு சமூகமளித்தனர்,
இவ்விழாவை சம்ஸ் பதி மற்றும் ஆசிம் ஹாசர் தொகுத்து வழங்கியதோடு DR நஜிமுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
SLMS CANADA அமைப்பானது 2017ம் ஆண்டுக்குக்குரிய செயட்திட்டத்திற்கமைவாக வீடுகள் அற்ற சுமார் 480 வறியவர்களுக்கு இலவச உணவுகள், உடைகள் மற்றும் இதர சமூகசேவை பணிகள் செய்தும் எதிர்காலத்தில் இன்னும்பல செயட்திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பாக்கிய அனைவருக்கும் மற்றும் தொண்டர்களாக பனி புரிந்த அனைத்து இளைஞர்களுக்கும் SLMS CANADA தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.