இந்த போன்களில் 31க்கு பிறகு வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது..!

ன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிரபலமெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஒருசில இயங்கு தளங்களில் செயல்படப்போதில்லை.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், 2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது.

கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை அளிக்கும் இயங்குளங்கள்தான் தற்போது விற்பனையாகும் செல்ஃபோன்களில் 99.5 சதவீதத்தில் உள்ளன. வாட்ஸ் ஆப் அறிமுகமான காலகட்டத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவான செல்ஃபோன்களில்தான் இவை இருந்தன.

ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கிய சிம்பியன் எஸ்60, ஆண்ட்ராய்ட் 2.1 மற்றும் 2.2 பதிப்புகள், விண்டோஸ் போன் 7, ஐபோன் 3ஜிஎஸ்/ஐஒஎஸ் 6 ஆகிய மொபைல் இயங்குதளங்களில் செயல்படும் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று கூறி அதற்கான கால அட்டவணையையும் அப்போது வாட்ஸ்ஆப் வெளியிட்டது.BBC

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -