அதன்படி வாட்சப் புதிய பதிவில் குரூப்களை உருவாக்கும் அட்மின்கள் அந்த குரூப்பில் உள்ளவர்களை கண்காணிக்க முடியும். அத்துடன் அதில் உள்ள உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் முடியும்.
மேலும், குழுவை உருவாக்கியவருக்கு குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் சில தனிப்பட்ட உரிமைகளை வரையறுக்க முடியும். அத்துடன் குழுவில் உள்ள ஒருசில உறுப்பினர்களுக்கு மட்டும் தெரியாத வகையில் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் முறையும் புதிய வாட்சப்பில் இடம்பிடித்துள்ளாதக குறிப்பிடப்படுகின்றது.
குழுவில் பதிவிடப்படும் ஒரு செய்தியை அனைவரின் பார்வைக்கு கொண்டு செல்வதா அல்லது தடை செய்வதா என்பதனையும் குழுவை உருவாக்கியவரால் கட்டுப்படுத்த முடியும்.
ஆபாசம், போலி வதந்திகள், வன்முறைகளை தூண்டும் செய்திகள் போன்றவற்றினை வாட்சப்பில் அதிகமாக பகிர்வதால் அவற்றினைக் கட்டுப்படுத்தவே இந்த புதிய செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.