M.I.Nousath ( Addalaichenai)-
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் SLCDF நிறுவனத்தின் நிதியுதவியுடன் இறக்காமம் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் உதவியுடன் சமூகப்பொறுப்புக் கூறல் செயன்முறையினை இவ்வாண்டு முன்னெடுத்தது.
அந்தவகையில்சமூகப்பொறுப்புக் கூறல் எண்ணக்கருவானது சமூகத்துக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இடையிலான இடைவெளிகளை இணங்கண்டு உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை மக்களுக்கு அறியச்செய்து அந்த சேவைகள் மக்கள் சமூகத்துக்கு சென்றடையும் வகையில் சமூகத்துக்கும் - உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இடையில் இணக்கப்பாட்டை கொண்டுவரும் ஒரு செயன்முறையாகும்.
இச்செயன்முறை இறக்காமப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இறக்காமம் - 01, இறக்காமம் - 02 ( 10ம்,11ம் கொலனி , மதீனாபுரம், இலுக்குச்சேனை, சபாநகர் ), இறக்காமம் - 03, இறக்காமம் - 04, இறக்காமம் - 05 ( அமீர்அலிபுரம், நியுகுண, மலையடிக்கிராமம் ), இறக்காமம் - 06, இறக்காமம் - 07 ( நல்லதண்ணி மலை, குடுவில் , மாணிக்கமடு ), இறக்காமம் - 08 ( மொகிதீன் கிராமம் ), இறக்காமம் - 09, வரிப்பத்தாஞ்சேனை – 01,02,03 ஆகிய கிராமங்களை உள்ளீர்த்து மக்கள் பங்கேற்புடனான தேவை மற்றும் சேவைப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் இறுதி வடிவமாக திரட்டப்பட்ட தகவல்கள் யாவும் முழு மொத்த அறிக்கையாக தயாரிக்கப்பட்டு 28.12.2017ம் திகதி பிரதேச சபையின் கேட்போர் கூட மண்டபத்தில் பிரதேச சபையின் செயலாளர் ஜனாப். எல். முகம்மட் இர்பான் அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப்.ஏ.ரீ.எம்.ராபி, இறக்காமப் பிரதேச செயலாளர் ஜனாப்.எம்.எம்.நசீர், கிராம நிலதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாய் இடம்பெற்றது.
இதன்போது அறிக்கை தொகுப்பினை இணையத்தின் தவிசாளர் திரு.வ.பரமசிங்கம் அவர்களின் வழிகாட்டுதலுடன் இணையத்தின் அபிவிருத்தி இணைப்பாளர் ஜனாப்.எம்.ஐ.நௌசாத் அவர்களினால் அளிக்கை செய்யப்பட்டதுடன். SLCDF நிறுவன திட்ட உத்தியோகத்தரும் வளவாளருமான திரு. ஏ. சொர்ணலிங்கம் அவர்களினால் இந்நிகழ்வு நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இந்நிகழ்வு சிறப்புற அமைவதற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் செயலாளர், பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் SLCDF இன் திட்ட உத்தியோகத்தர் அத்துடன் சபை சார்பாக கள ஆய்வின் போது ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர் ஜனாப்: ஏ.எல்.முகம்மட் சாபிர் அவர்களும், பயிற்றுவிப்பாளரும் உதவியாளருமான ஜனாப். ஏ.எம். ஆசிக் ஆகியோரும் ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


