ஏறாவூர் றிபாய்-
ஓட்டுப்பள்ளி அருகாமையில் சுமார் 15வருடங்களாக சிறப்பாக இயங்கிவரும் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடா வருட பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்வுகள் தொகுப்பில்
இன்று அல்ஹூதா இளைஞர் கழகத்தின் உதவியோடு சிறப்பாக இம்முறை முன்பள்ளியில் இருந்து பாடசாலைக்கு செல்ல இருக்கும் குழந்தைகளின் நிகழ்வுகளுக்கு
தலமைதாங்கிய S.M றகீம்
(வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்)
பிரதம அதிதி
அல்ஹாஜ் U.L.M. ஜெய்னுத்தீன்
( முன்பள்ளி செயலாற்று பணிப்பாளர்)
கௌரவ அதிதியாக
அல்ஹாஜ் A.C.A. கலீல் றகுமான்
( A.D.E)
மற்றும்
விஷேட அதிதிகளாக கிராம உத்தியோகத்தர்
M.சாபி
பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்
M.L.A லத்தீப்
K.A வாஜித் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்
விஷேட உரையின்போது
ஏறாவூரில்முன்பள்ளி பாடசாலைகள் மொத்தமாக 32 காணப்படுகின்றது ஒவ்வொரு பாடசாலையும் போட்டியும் பொறாமையுடனும் செயற்படுவதால் பல பிரச்சினைகள் பதிவாகுவதாகவும்.
இவ்வாறான முன்பள்ளி பாடசாலைகளே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றது என்பதில் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயற்படும் போது இம்மாணவர்களால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என முன்பள்ளி செயலாற்று பணிப்பாளர் U.L.M. ஜெய்னுத்தீன் சேர் சுட்டிக்காட்டினார்.


