மு.இராமச்சந்திரன்-
சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனைக்காக வைத்தியருந்த ஒருவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பிரதேசத்தை சேர்ந்தவரை 19.12.2017 இரவு கைது செய்யப்படுள்ளார்.
அட்டன் பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்தை வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினரால் சிறுத்தையின் பல். நகம் உட்பட தோல் என்பன மீட்கப்பட்டுள்ளது
குடாகம காட்டுப்பகுதியிலே சிறுத்தையை கொன்று இவ்வாறு உறுப்புக்களை விற்றபனைக்காக. வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன்
சந்தேக நபரை 20.12.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

