வவுனியா கல்மடுவில் அறநெறி பாடசாலை கட்டிட திறப்பு விழா.!





வுனியா பூம்புகார் கல்மடு கிராமத்தில் சிலம்பொலி இளைஞர் கழகத்தின் இளைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலையின் திறப்பு விழா அண்மையில் கழகத்தின் தலைவர் திரு லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஈச்சங்குள பொலிஸ் பொறுப்பதிகாரி திரு ஆரியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறநெறி பாடசாலையினை திறந்து வைத்தார்கள்.

இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன், நிஸ்கோ இணைப்பாளர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரி திரு ஸ்ரெனி, கல்மடு பிரதேச உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -