ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
உலக எயிட்ஸ் தினத்தையொட்டி பொதுமக்களை அறிவூட்டும் வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு-கிரான் பிரதேசத்தில் நடைபெற்றது.
'எல்லோரும் பரிசோதிப்போம்' என்ற தொனிப்பொருளில் உலக தரிசன நிறுவனம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், குடும்ப திட்டமிடல் நிலையம், சிஎச்ஏ, குடிசன சேவைகள் நிலையம், பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் உலக தரிசன நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஜே. ரொபர்ட் அகிலானந்தன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு பிராந்திய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு டாக்டர் அனுசா சிறிசங்கர், உலக தரிசன நிறுவனத்தின் கிரான் பிரதேச அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் இந்து றோஹாஸ் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளும் இங்கு கருத்துரை வழங்கினர்.
இங்கு இரத்த பரிசோதனையும் நடைபெற்றது.