ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு தெளிவு படுத்தும் கூட்டம் நேற்று அட்டன் இந்திரா விருந்தகத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏம. ராம் ஆகியோர் உரையாற்றுவதையும், கலந்து கொண்ட வேட்பாளர்களையும் படங்களில் காணலாம்.