எயிட்ஸ் நோய் தொடர்பாக பொதுமக்களை அறிவூட்டும் வேலைத்திட்டம்



ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

யிட்ஸ் நோய் தொடர்பாக மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுமக்களை அறிவூட்டும் வேலைத்திட்டத்தின்கீழ் வீதிநாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் 06.12.2017 ஏறாவூர்- பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.

'கவனமாகக் கவனிப்போம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்திற்கான நிகழ்வு ஏறாவூர் - பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் திருமதி கே. துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய பாலியல் மற்றும் எயி;ட்ஸ் தடுப்புப் பிரிவு டாக்டர் திருமதி அனுசா சிறிசங்கர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எயிட்ஸ் நோய் ஏற்பட்டவர்களை கவனமாக கவனிப்பதுடன் இந்நோய் தொற்று ஏற்படாதவண்ணம் ஏனையவர்களையும் கவனமாகக் கவனித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையினையும் கவனமாகக் கவனிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான எயிட்ஸ் விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள 14 பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -