களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் இணைந்து டெங்கு விழிப்புணர்வு





வடிவேல் சக்திவேல் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து இன்று ( 6 ) பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினையும் அதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமானப் பணியொன்றினையும் ஒழுங்கு செய்திருந்தனர்.

பாடசாலை பிரதி அதிபர் ரீ.ஜனேந்திரராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜீ .சுகுனன் , தாதி உத்தியோஸ்தர்களான திருமதி எஸ்.ஜீவன் , ஏ.எஸ்.எம்.நசூஹான் ஆகியோர் மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விரிவுரையை நிகழ்த்தியதுடன் வைத்தியசாலையின் பல் வைத்தியர் டாக்டர் ஏ.எச்.எம்.சஸ்லி மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -