அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நீதிமன்ற சமுதாயஞ் சீர் திருத்த திணைக்களமும் ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானமும் மரநடுகையும் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானது.
திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் இச்சிரமதானப்பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் திருகோணமலை நீதவான் வளாகத்திற்குற்பட்ட சமுதாயஞ்சீர் திருத்த பணியாளர்கள் ஜம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தில் நீதவான் ஹம்ஸா மரத்தினை நாட்டி வைத்துடன் எதிர்காலத்தில் இம்மரத்தை பார்வையிட வருவதாகவும் அதிபரிடம் தெரிவித்தார்.