பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையக தேசிய முன்னணியால் நிவாரணம்




பொகவந்தலாவ செல்வந்த, கொட்டியாகல, பொகவான மற்றும் குயினா ஆகிய தோட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாகபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்டன பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டுள்ளது.
மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினர் இந்த நிவாரணப் பொருட்களைவிநியோகம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

தலவாக்கலை பிரதேச வர்த்தகர்களிடமிருந்து ஒரு தொகுதி பொருட்கள் திரட்டப்பட்டதுடன், கட்சியினால் மற்றுமொரு தொகுதி பொருட்கள்திரட்டப்பட்டு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மலையக தேசிய முன்னணியின் தலைமையக் காரியாலயத்தில் இந்த பொருட்கள் பொதியிடப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களின்வீடுகளுக்கே சென்று பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர், பிராந்திய தலைவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -