30 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்த எமன் அதிபர் அலி அப்துல்லா சுட்டுக்கொல்லப்பட்டார்.



மனில் புரட்சிபடையினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஏமன் அதிபராக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்துவந்த அலி அப்துல்லா சலே 2012ம் ஆண்டு ஏற்பட்ட அரேபிய புரட்சியால் அரசியல் நெருக்கடிக்கு பணிந்து பதவி விலகினார் என்பது குறஜப்பிடத்தக்கதாகும்.

எனினும் ஏமன் நாட்டின் வடக்குப்பகுதியில் அல்கொய்தாவினரும் தெற்கே ஈரான் ஆதரவு பெற்றஹூதி புரட்சி படையினரும் அதிபருக்கு எதிராக செயல்பட்டவந்தன.

இந்த திலையில் சலே ஆதரவு படையினருக்கும் ஹூதி புரட்சிபடையினருக்கும் போர் நடைபெற்று வந்துள்ளது தலைநகரான சானாவில் இரு தரப்பினருக்கும் கடந்த ஒருவாரமாக நடந்த சண்டையில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்டதாக அந்நாட்டு டி.வி. சானல் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தகவலறிந்த சலேவின் ஆதரவாளர்கள் ஏமனில் உள்ள ஈரான் தூதகரத்தை தாக்கி தீவைத்து கொளுத்தியுள்ளனர். 
இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றமை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஈராக்  தலைவர் சதாம் ஹுசைன், லிபியா தலைவர் கதாபி ஆகியோரின் கோரக்கொலைகளுக்கு அடுத்ததாக யெமன் தலைவர் அலி அப்துல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -