லிந்துலை பகுதயில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்







க.கிஷாந்தன்-

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று 14.12.2017 அன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெங்கடாசலம் சகுந்தலா வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு மின்சார நீரை இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் வயரினைப்பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் நித்திரை கொள்வதற்காக வேறொரு வீட்டிற்கு செல்வது வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 13.12.2017 அன்று இரவு குறித்த பெண்மனி நித்திரை கொள்ள வராதவிடத்து அவரை தேடிய போதே 14.12.2017 அன்று அதிகாலை அவர் நீர் இறைக்கும் மோட்டர்க்கு அருகாமையில் கிடந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இப்பெண் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என வீட்டார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -