ஹாசிப் யாஸீன்,றியாத் ஏ. மஜீத்-
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் கலை, இலக்கியவிழாவும், கலைஞர் சுவதம் பாராட்டு நிகழ்வும் 'சுவதம் சஞ்சிகை' வெளியீடும் நேற்று(19) லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின்மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன்,மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றம்சான், சாய்ந்தமருது பிரதேசகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.நௌஸானா உள்ளிட்ட கலை,இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை, இலக்கிய, இசை, பாடல் உள்ளிட்ட பல்துறைகளில் பிரகாசித்த 30கலைஞர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






