2017 டிசம்பர் 31ஆம் திகதி நிறைவுக்கு வரும் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப் பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி)



டிசம்பர் 29, கொழும்பு: ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான  பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி காலாவதியாகின்றது. அடுத்த ஆண்டுக்கான ஜி.எஸ்.பியின் மீள்அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. இதன் விளைவாக ஜி.எஸ்.பி இவ்வாண்டுடன் காலாவதியாவதனால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 1, 2018 முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படும்.

ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக இருப்பதில் பெருமை கொள்கின்றது. பூகோள வர்த்தக வரைபுகளின் 2016 அறிக்கைப்படி, அமெரிக்காவானது 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது.

குறித்த இந்நிகழ்ச்சித்திட்டம் செயற்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான விபரங்களுக்காக ஐக்கிய அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு இணையத்தளத்தில் பிரத்தியேக பக்கத்திற்கு விஜயம் செய்யுங்கள்.


Sri Lanka Export Statistics
Commodity: _Total, All Commodity Chapters
Annual Series: 2015 - 2016
Partner Country
United States Dollars
2015 
2016 
World
10,224,554,632.00
10,210,649,427.00
United States
2,802,407,255.00
2,806,185,276.00
United Kingdom
1,030,719,243.00
1,043,757,803.00
India
644,664,266.00
550,531,597.00
Germany
474,684,369.00
505,490,626.00
Italy
433,896,689.00
427,841,626.00
Belgium
282,389,955.00
337,671,197.00
United Arab Emirates
274,257,515.00
274,964,963.00
Netherlands
219,972,788.00
207,638,703.00
Japan
214,286,053.00
200,017,164.00
China
295,713,655.00
198,842,412.00
Russia
193,587,842.00
181,881,197.00
 Source:  Global Trade Atlas

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -