நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும்

நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள அத்­தி­யா­வ­சிய திருத்த வேலை­களை முன்­னிட்டு நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை அதி­காலை 5.00 மணி வரை­யி­லான 15 மணி­நேர நீர்­வெட்டு கொழும்பு புறநகர் பகுதிகளில் அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

இதற்­க­மைய ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உப பாதைகளிலும் இந்­நீர்­வெட்டு அமு­லாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆகவே பொது­மக்கள் நீரை தேக்கி வைத்­துக்­கொள்­ளு­மாறு நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -