அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு ரத்தத்தில் குளிக்க வைப்போம்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு ரத்தத்தில் குளிக்க வைப்போம் என அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.  இயக்கங்கள் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அறிவிப்பு வெளியானது முதலே டிரம்பின் இந்த முடிவிற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா டிரம்பின் இந்த முடிவு சரியானது அல்ல என குற்றம் சாட்டியுள்ளது. டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன.

பாலஸ்தீனர்கள் டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம் மற்றும் அமெரிக்க தேசியக்கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரத்தத்தில் குளிக்க வைப்போம் என அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். இயக்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -