தேசிய பாடசாலைகளுக்காக 1288 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்-படங்கள்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம்¸ விஞ்ஞானம் வர்த்தகம் தொழில்நுட்பம் விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 08.12.2017 அபேகம வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நியமனம்; பெற்ற பட்டதாரிகளில் 1223 பேர் ஆசிரியர் சேவை 3-1 க்கும்;. 65 பேர் 2-2 க்கும் உள்வாங்கபட்டுள்ளனர் இவர்களுக்கு 21 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்கபடவுள்ளது. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு நியமிக்கபடவர். தமிழ்மொழி மூலம் 297 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆசிரியர் சேவை 3-1 க்கு 292 பேரும் 2-2 க்கு 05 பேரும் உள்வாங்கபட்டுள்ளனர். இவர்களில் ஆங்கிலமொழி மூலமான 40 பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -