கடந்த நான்கு வருடகாலமாக உக்குவெல பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வரகாமுற மற்றும் உகுவெல கிளைகளின் ஏகத்துவப் பிரச்சாரம் இஸ்லாத்துக்கு முரணான சமூகத்தைப் பாதிக்கின்ற விடயங்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது.
எந்தவொரு நெகிழ்ச்சிதன்மையற்று குர்ஆன் வஹி மட்டும்தான் மார்க்கம் என ஆணித்தரமான கொள்கையுடன் செயற்பட்டு மிகவும் வீரியமாக நடைபெற்று வருகிறது. “அல்ஹம்து லில்லாஹ்”.
இதன் விளைவாக தற்போதைக்கு பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் வரகாமுறை கிளை மற்றும் உக்குவெல கிளை மிக வீரியமாக இயங்குகின்றது.எகத்துவம் பெரிய விருட்சமாக வளர்ந்து பூக்கள் பூத்து குழுங்குவதை காணலாம்.
இதன் விளைவாக தற்போதைக்கு பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் வரகாமுறை கிளை மற்றும் உக்குவெல கிளை மிக வீரியமாக இயங்குகின்றது.எகத்துவம் பெரிய விருட்சமாக வளர்ந்து பூக்கள் பூத்து குழுங்குவதை காணலாம்.
அதன் விளைவாக நமது பிரதேசத்தில் மிஸால்,பஹாத் போன்ற சிறந்த சொற்பொழிவவாளர்களையும் உருவாக்கியுள்ளது, அதன் மூலம் மார்க்க விளக்க கூட்டங்கள், ஜும்மா பயான்,தர்பியாங்கள், சமூக சேவைகள் இரத்த தானம் ,இஸ்லாம் இனிய மார்க்கம் சிங்கள மொழி மூலம் மற்றும் இஸ்லாம் எளிய மார்க்கம் மார்க்கம் சம்பந்தமான பிரச்சினைகள் சாத்தியத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் ,வரகாமுற மக்தப் சிறுவர்களுக்கான மார்க்க அகீதா பிக்ஹ் வகுப்புக்கள் பெண்கள் மகாநாடுகள் ,பெண்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி ,பெண்கள் பயான்கள் ,சமூக அனர்த்தங்களின் போது சமூக சேவைகள்,வறியவர்கள் வருமானம் குறைந்தவர்களுக்கு பைத்துல்மால் நிதி திட்டங்கள் ,இளைஞர்களுக்கான மார்க்கம் அகீதா அல்குர்ஆன் விளக்கவுரை மற்றும் அவர்களுக்கு மனித வள ஆளுமை பயிற்ச்சிகள் நவீன கால பிரதேச மாவட்ட ரீதியான பிரச்சினைகளை தொடர்பான ஆலோசனைகள் என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது அல்லாஹு அக்பர்
அதில் சிறப்பம்சமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் நமது உரிமைகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிராக சதிகளை மக்களுக்கு தெளிவு படுத்தி விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் அதன் நிகழ்ச்சி நிரலில் "ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின்" "வாழ்வுரிமை மாநாடு" 18.11.2017 வரும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10.00 மணி வரை SLTJ வரகாமுற கிளை முன்னால் சமூன் மாவத்தை முன்னால் நடைபெற இருக்கின்றது அனைவரும் தவறாமல் சமூகம் தந்து பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
