எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,வாழைச்சேனை-
உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்ளிவிபரங்களின் படி இந்நாட்டு சனத்தொகையில் 25 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் சீனிக்கு அடிமையானதன்மை எனவும் முறையான நடவடிக்கை மேற்கொண்டால் இதிலிருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது
இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அவர்களும் நாட்டின் தலைநகரத்தில் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு நி்கழ்வுகளை நடாத்தி நீரிழிவு நோய்யிலிருந்து மக்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு நடைபவனியும் நாடக நிகழ்ச்சிகளை பல்வேறு விடயங்களில் முன்னனியாக திகழும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை 15.11.2017 அன்று புதன்கிழமை ஏற்பாடு செய்து சிறப்பாக நடாத்தி மக்களை விழிப்படைய செய்தனர்.
இவ்நிகழ்வுகளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மதன் அவர்கள் தலைமை தாங்கி மிக சிறப்பாக நடாத்தி முடித்தார் எதிர்வரும் காலங்களில் மக்கள் நன்மை அடையக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் செயற்திட்டங்கள் இடம் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.