வடக்கு கிழக்கை இணைப்பதற்கு SLMCக்கு விருப்பம் இல்லை - அமைச்சர் ஹக்கீம்

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தமது கட்சி விரும்புவதில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்து வெளியாகிய அரசியலமைப்பு செயற்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது கட்சி எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு தமது கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார். 

டெ.சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -