மலையகத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடி உதவி – அமைச்சர் திகாம்பரம் அறிவிப்பு

சாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டப்பகுதி மக்கள் உடனடியாக பிராந்திய ட்ரஸ்ட் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்;டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று இரவு நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுவருகின்ற நிலையில் மக்கள் தமது பிரதேசத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனமான ட்ரஸ்ட் நிறுவன காரியாலயங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தமது சேத விபரங்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளாரஇந்த தொடர்பினை ஏற்படுத்தி கொடுப்பதில்  பொதுமக்களுக்கு மக்களுக்கு பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் (PCCF உதவியாளர்கள் மற்றும் பிரஜா சக்தி உத்தியோகத்தர்களும் அமைச்சரின் பிரதேச இணைப்பாளர்களும் உதவுமாறும் அமைச்சர் திகாம்பரம் அவசர பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -