மரங்கள் முறிந்து வீழந்து போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தால் தமது அவசர அழைப்புக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையையடுத்து கொழும்பின் பல பாகங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொழும்பு மாநாகர சபை அவசர தொலைபேசி இலக்கங்களை பொதுமக்களின் நன்மைகருதி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக 0777 313247 மற்றும் 110 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகளை மேற்கொண்டு அறிவிக்குமாறு கொழும்பு மாநகரசபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -