பைஷல் இஸ்மாயில்-
கடந்த மூன்று தினங்களாக பெய்த மழையினால் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பல வீதிகளும், வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாடம் கூழித் தொழில் செய்கின்றவரகளின் நிலைமையும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனை எந்த அரசில்வாதிகளும் கவனத்தில் கொள்ளாது கவனிப்பாரற்றுக் கிடந்த நிலைமையினை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீனின் கவனத்திற்கு இன்று (02) அக்கரைப்பற்று பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டன.
அதற்கமைவாக, வெள்ள நீரினினை வடிந்தோடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் மாநகர சபையின் அதுதொடர்பான அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சகல வேலைகளையும் களத்தில் நின்று செய்து முடித்துக் கொடுத்தார்.
இவரின் இச்சேவையினை அக்கரைப்பற்று பிரதேச மக்கள் பாராட்டி, நன்றியும் தெரிவித்தனர்.


