அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து..
இடைக்கால அறிக்கையில் அடிப்படையாக எமது கட்சியின் இரண்டு நிலைப்பாடுகள் சேர்க்கப்படவேண்டியுள்ளன. ஒன்று, கரையோர மாவட்டம் சம்பந்தமான கோரிக்கை. மற்றையது பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பாக தனியானதொரு அறிக்கை. அதாவது, தற்போதைய தேர்தல் முறையை வைத்துக்கொண்டு 198 தேர்தல் முறையை உருவாக்க வேண்டும் என்ற விடயத்தை எழுதிக்கொடுத்துள்ளோம். அவ்விரண்டையும் அவர்கள் இணைக்கவில்லை. தவறுதலாக இணைக்கவில்லை எனக் கூறினார்கள். இறுதி அறிக்கை தயாரிக்கப்பட முன்னர் அதையும் இணைத்தே கலந்துரையாடுவோம் என்று பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார். இதுவே எமது பிரதானமான கோரிக்கை.என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸpன் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்
இடைக்கால அறிக்கையில் ஒவ்வொருவரினதும் நிலைப்பாடுகளே எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக வடகிழக்கு தொடர்பாக 3 நிலைப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனக்கூறுகின்றது. ஜாதிக ஹெல உறுமய எந்தவொரு மாகாண சபையும் இணைக்கப்படுவதற்கான தற்போதுள்ள கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளது. தற்போதைய உள்ள கருத்துப்படி மாகாணங்கள் இணைக்கப்படும் போது சர்வஜன வாக்கெடுப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இணைப்புக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் கைச்சாத்திட்டுக் கொடுத்துள்ளது என நிறைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரிஷாதும், சம்பிக்கவும் கையொப்பமிட்டார்கள். அதனால் சம்பிக்க வடகிழக்கு இணைப்புக்கு ஆதரவென்றா அர்த்தம்?
வடகிழக்கு தொடர்பான 3 நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு அதன் கீழ், கலந்துரையாடலுக்காக வைக்கப்பட்டுள்ளது. லேதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும என்று தெரிவித்துள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடைக்கால அறிக்கையில் தீர்வு காணப்படாத விடயங்களில் அதாவது எல்லோர் மத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்படாத விடயங்களில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. ஒன்று, ஜனாதிபதி முறையை வைத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. ஐக்கிய இலங்கையா அல்லது ஒற்றை இலங்கையா என்கின்ற விடயத்தில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. வடகிழக்கு இணைப்பு தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
