அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்கும் பிரித்தானிய பிரதி உயரிஸ்தானிகர் டொம் பேன் (TOM BURN) இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் 3.30மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடை பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களும் இன நல்லிணக்கம்,அபிவிருத்தி,அரசியல் பற்றி ஆளுனரிடம் வினவியதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவில் வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
அந்த வாக்குகள் தொடர்ந்தும் இருக்கின்றதா? எனவும் பிரித்தானிய பிரதி உயரிஸ்தானிகர் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் தமிழ் மக்களின் விடயத்தில் டயஸ் போரா என்ன செய்திருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளனர்.
சுற்றுலாத்துரை,கல்வித்துறை போன்றவற்ளை எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்களை அடிப்படையாகக்கொண்டும் அபிவிருத்தி அடையச்செய்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.