பாரிய மண்சரிவால் மலையக புகையிரத சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு








க.கிஷாந்தன்-

ஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் 29.11.2017 இன்று அதிகாலை 1 மணியளவில் பாரிய மண்சரிவுகளும், கற்களும் புரண்டு விழுந்துள்ளதன் காரணமாக மலையக புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் புகையிரதம் ஒஹிய புகையிரத நிலையத்தில் தரித்துள்ளதுடன், பாதிப்பேற்பட்டுள்ள புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

மண்சரிவு காரணமாக மலையக புகையிரத பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத்தில் பயணித்த பயணிகள் போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தினால் 29.11.2017 அன்று அதிகாலை 4 மணியிலிருந்து குறித்த புகையிரதத்திலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கொழும்பு பதுளை புகையிரத சேவைகள் ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து புகையிரத சேவையும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பிரதேசத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன், மழையும் பெய்து வருவதனால் சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -