யாழ்நகரப்பகுதிகளில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டிகள் திருட்டு போனமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடிய துவிச்சக்கரவண்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் அரியாலை மற்றும் கொழும்புத்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் 11 துவிச்சக்கரவண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபரை வைத்தியசாலை பொலிஸார் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இது வரை காலம் திருடிய துவிச்சக்கரவண்டிகள் மீட்கப்பட்டன. யாழ் நகரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு துவிச்சக்கரவண்டிகளை பறிகொடுத்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து அடையாளம் காட்டி பெற்று கொள்ள முடியுமாக பொலிஸார் தெரிவித்தனர்.