அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஓன்றுகூடலும் புதிய அங்கத்தவர்கள் தெரிவும்

நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்-


நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஓன்றுகூடல் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் நேற்று (19/11/2017) இடம்பெற்றது.

பாடசாலையின் கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்திப் பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டியுள்ள முக்கிய பணிகள் சம்பந்தமாகவும் இங்கு ஆராயப்பட்டன. இதேவேளை புதிய அங்கத்தவர் தெரிவு நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

நடப்பு நிர்வத்துக்கான தலைவராக எம் எம் எம் இர்ஷட் (அதிபர்) அவர்களும் செயலாளராக எம் எஜ் ஹுஷாம் அவர்களும் பொருளாளராக எம் எம் எம் றிப்கான் அவர்களும் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவராக எம் பி எம் றஷ்மி ,உப பொருளாளராக அய் ஆர் எம் ஆதிப் மற்றும் எம் கே எம் அபான், உப செயலாளராக ஏ ஜ எம் தாரிக் மற்றும் எம் எஜ் எம் ஹிபலான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னேற்றத்துக்கு தாம் செய்து வரும் உதவிகளை ஒழுங்கு படுத்தி தொடராக செய்து வருவது, பழைய மாணவர்களின் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் சமூக, கல்வி, கலாச்சார, ஆளுமை விருத்திக்கு உரிய நேரத்தில் உரிய முன்னெடுப்புகளை எடுப்பது என்ற இரட்டை நோக்கை தமது பழைய மாணவர் சங்கத்தின் இலக்காகக் கொண்டு இயங்குவது என்றும் ஏக மனதாக தீர்மானம் பெறப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -