இன்று இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் வனஇலாகா அதிகாரி ஒருவர் உயிரிழப்பு




ட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 11.45 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் வனஇலாகா அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை வனஇலாகா காரியாலத்தில் இருந்து தனது கடமைநிமித்தம் புனானை பகுதிவன உத்தியோகத்தர் புனானை பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தை நோக்கி வந்த காரும் மோட்டார் சைக்கிளும் புனானை 120வது மைல்கல்லுக்கு அருகாமையில் நேருக்கு நேர் மோதியதிலயே இவ் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நபர் ஸ்தலத்திலயே உயிர் இழந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

புனானை பிரிவிற்கு பொறுப்பான பகுதிவன உத்தியோகத்தர் அதிகாரியான மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏ.சி.ஏ.றவூப் (வயது 42) என்பவரே மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -