ஏ.ஆர்.எம்.றிபாய், எஸ்.எச்.எம்.றிஹான் -
ஏறாவூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் "பாரம்பரிய உணவுகளின் கண்காட்சியும் விற்பனையும்" இன்று (29.11.2017) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது.
ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏறாவூர் விவசாய போதனாசிரியர் செல்வி.MH.முர்சிதா ஷிரின்அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வு பிரயோசனமானதாக இருந்ததுடன், உணவுகளின் உற்பத்தி முறைகளையும் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

