செய்தி) ஜனவரி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 26750 நோயாளர்களில் 13520 பேர் பாரிசவாத நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்


பைஷல் இஸ்மாயில் -

நிந்தவூர் தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இவ்வருடம் 2017 ஜனவரி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 26750 நோயாளர்கள் வைத்திய சிகிச்சையை பெற்றுள்ளதாகவும் இதில் பாரிச வாத நோயாளர்களே மிக அதிகமான சிகிச்சையினை பெற்றுள்ளதாக நிந்தவூர் தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

“உணவும் சுகாதாரமும்” என்ற தொனிப் பொருளில் இன்று (29) நிந்தவூரில் இடம்பெற்ற மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரிசவாத நோய்க்கு 13520 பேரும், சீனி நோய்க்கு 6730 பேரும், குளோஸ்ட்ரோல் நோய்க்கு 3210 பேரும், சிறு நீர நோய்க்கு 315 பேரும், மன அழுத்த நோய்க்கு 700 பேரும் மற்றும் ஏனைய நோய்களுக்காக 1800 பேரும் இவ்வருடம் சிகிச்சையினை பெற்றுள்ளனர். இவர்களில் மிகக் கூடுதலானவர்கள் சுகத்தை அடைந்துள்ளதாகவும் கூறினார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வைத்தியசாலைக்கு மிகக் கூடுதலான நோயாளர்கள் வருகை தந்துள்ளதுடன் பல பாரிச வாத நோய்களர்கள் 95 வீதமானவர்கள் நல்ல சுகத்தையும் அடைந்துள்ளார்கள். என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

மேலும், குறித்த ஆராய்ச்சி வைத்தியசாலையின் புதிய கட்டிட நிர்மாணப் பணிக்காக 196 மில்லியன் ரூபாவினை பிரதி சகாதார அமைச்சர் பைசால் காசிமின் வேண்டுகோளுக்கமைவாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜி சேனரத்தணவினால் இவ்வாண்டுக்கான நிதி ஒக்கீட்டில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -