அமீர் அலி பொது விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாண வேலைத்திட்ட அங்குரார்பண நிகழ்வு






அகமட் எஸ். முகைடீன்-

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் 15 இலட்சம் ரூபா முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் சவளக்கடை 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாண வேலைத்திட்ட அங்குரார்பண நிகழ்வு இன்று (12) ஞாயிற்றுக்கிழமை அமீர் அலி விளையாட்டுக் கழக தலைவர் எம்.பி. நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி. நிஸார் ஹாஜி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சவளக்கடை மத்திய குழுத் தலைவர் ஏ. அஸீஸ், செயலாளர் ஏ.எல். ஜெலீல், சபூரியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் சாஹுல் ஹமீட், பிரதேச விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல்லை நட்டிவைத்து மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாண வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -