அப்துல்சலாம் யாசீம்-
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
பிரைஸ் ஹட்சிசனிற்கும் (Brycy Hutchesson) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் ஆளுனர் அலுவலகத்தில் நே ற்று (29) பிற்பகல் 5,30மணியளவில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் மேற் கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா,உள்ளுராட்சி அபிவிருத்தி மற்றும் சிறு கைத்தொழில் துறை தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா வழங்கும் பங்களிப்பிற்கு நன்றியை தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாணத்தின் கல்வி,மருத்துவம் மற்றும் மனித வள மேம்பாட்டிற்கு அவுஸ்திரேலியா அரசு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.