இந்தக் கல்வி முறையை நுஸ்ரான் மௌலவி ஏன் எதிர்க்க வேண்டும்..?

முஹம்மது அஸ்ரி -

ப்போதுள்ள கல்வி முறையில், பாடத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது உங்களின் இயல்பான சிந்தனைகளை சிறை வைப்பது. அதாவது உங்கள் இயல்பில், உங்களை சிந்திக்க விடாமல் தடுப்பது. உங்களது முதலாளிகளுக்கு தேவையானவாறு உங்களை வடிவமைத்து, உங்கள் சுயத்தை அழிப்பது. இதையெல்லாம் தாண்டி, இந்த பாடத்திட்டத்தில் எந்த அறமும் இல்லை. அது ஒழுக்கத்தை சிறிதளவும் கற்று தரவில்லை.

இந்த கல்வி முறை நுகர்வை கற்பிக்கிறது. நுகர்வில் மட்டும் சந்தோஷம் அடையுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது. ஏனெனில், இது நிறுவனத்தின் கைக்கூலியால் (WORLD BANK, UN) வடிவமைக்கப்பட்ட கல்வி முறை.

உண்மையான கல்வி என்பது சுதந்திரத்தை போதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் இந்த கல்வி, நிறுவனங்களுக்கான அடிமைகளைதான் உற்பத்தி செய்கிறது.

நுஸ்ரான் மௌலவி கல்விக்கோ, பள்ளிகளுக்கோ எதிரானவர் அல்ல. ஆனால், இந்த கல்வி, பள்ளி முறை உங்களை சுதந்திரமாக சிந்திக்க விடாது என்கிறார். இந்த கல்வி முறையை கொண்டு நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வை காண முடியாது. அதனால், நம் பாடத்திட்டத்தையும், கல்வி முறையும் உள்ளூர் மயமாக்க வேண்டும் என்கிறார்.

அவர் விரும்புவது உள்ளூருக்கு தேவையான கல்வி, நுகர்வை முன்மொழியாத கல்வி. உங்களை உங்கள் இயல்பில் சிந்திக்க வைக்க, உங்களுக்கு பிடித்தமானவற்றை கற்க உதவும் கல்வி, பணம் அதிகம் தேவைப்படாத கல்வி.

நடைமுறையில் உள்ள கல்வி முறை உங்கள் பணத்தேவையை அதிகமாக்குகிறது. இந்த அமைப்பில் ஒரு குழந்தையை ஆரம்ப பாடசாலையில் சேர்க்க லட்சம் ரூபாய் செலவழிக்கிறார்கள். பிறகு அந்த குழந்தைக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதை நீங்கள் சரி என்கிறீர்களா...? மூன்று வயது குழந்தையின் முதுகில் இவ்வளவு சுமையை ஏற்றும் இந்த முறையை மாற்ற வேண்டாமா...? என்கிறார்.

முழு மனிதனாக, இயற்கையை மதித்து, அன்பை செலுத்தி, நேர்மையாக வாழ கற்று கொடுப்பதற்கு பதிலாக போட்டிகள், தேர்வுகள் அதன் மூலம் அழுத்தங்கள்,பொறாமைகள்,பிரச்சனைகள் பள்ளிகுள்ளும்,வெளியிலும் ஏற்படுத்தி கற்று கொள்ளும் ஆர்வத்தை சிதைப்பது பள்ளிகளில் நடக்கிறது.இந்த முறை வேண்டாம் என்கிறார்.

உலக ஆசையை ஊக்குவிக்கிறது.
நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். இதைத்தான் வேண்டாம் என்கிறார்.

றிசல்ட் வந்தவுடன் தற்கொலை செய்யும் பிள்ளைகளை உருவாக்கும் கல்வி முறை தேவையில்லை என்கிறார்.

நாஸ்த்தீகத்தையும் சடவாதத்தையும் ஒழுக்கமின்யையும் உருவாக்கும் கல்விமுறை தேவையில்லை என்கிறார்.

இஸ்லாத்துக்கு மாற்றமான கொள்கைகள், கோட்பாடுகள், தியரிகள் மூலமாக மூளைச் சலவை செய்யப்படுவது வேண்டாம் என்கிறார்.

மொத்தத்தில் உலக ஆசை காரணமாக இல்ம் கற்கப்படுவதை வேண்டாம் என்கிறார்.

நிச்சயமாக இக்கல்வி முறைக்கு எதிராக அனைத்து படித்த மக்களும் உலமாக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -